மீட்டவோ சாரங்கியே!

மீட்டவோ சாரங்கியே!

ஹாய் டியர்....

"மீட்டவோ சாரங்கியே!"இப்போ நீ நேரடி நாவலாக அமேசான் கிண்டிலில் போட்டிருக்கேன்.

டீஸர்1

இவனுங்க நம்ம இண்டியன் மாதிரி இருக்கமாட்டானுங்களே. சரியான காட்டானுங்களாட்டம் வேலை செய்வானுங்க. இவன்கிட்ட இருந்து இன்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பி வீட்டுக்கு போயிடணும் விநாயகா என்று வேண்டிக் கொண்டே சாப்பிட்டாள்.

இவனால ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா எங்கம்மாவை நான் சமாளிக்க முடியாது. உடனே வர்ற வரன்ல எவனையாவது பிடிச்சுக் கட்டி வைச்சிடுவாங்க என்று உள்ளுக்குள் உதறியவள் வெளியே அவனைக் கட்டுக்காத மாதிரியே கெத்தாக உட்கார்ந்திருந்தாள்.

இப்போது அவன் எழுந்து அவளைப் பார்த்து சிரித்தவாறே வந்தவன் ஜெலீனாவின் ஹஸ்பண்டைப் பார்த்து கை நீட்டியவன் “ஹலோ சார் என் பேரு 

ஜேக். நான் சின்னதா ஒரு கம்பெனி வைச்சு ரன் பண்ணிட்டிருக்கேன். என் கேர்ள் பிரண்டோட பெர்த்டே இன்னைக்கு அதுதான் செலிபிரேட் பண்ண வந்தோம். என்னோட ட்ரீட்டாக நீங்க என்ன வேணும்னாலும் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இன்னைக்கு மொத்தமா என் ட்ரீட்தான். டோண்ட் மிஸ்டேக்கன் மீ” என்றான்.

அவன் பேசியதைக் கேட்டதும் கொஞ்ச நேரேத்துக்கு முன்னாடி தியேட்டர்ல நம்மளைத் தூக்கியனவனா இவன்? வில் யூ மேரி மீ?ன்னு கேட்டானே. இவன் கேர்ள்பிரண்டுக்கு பெர்த்டேவாம் இன்னைக்கு. இந்த ரோக்குக்கு கேர்ள்பிரண்டு ஒன்னுதான் குறைச்சல் என்று உதட்டை சுழித்தாள்.

அவளைப் பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணடித்தவன் ஷாராவைப் பார்த்து கையசைத்தான்.

ஜெலீனாவோ உன் ட்ரீட்டு எங்களுக்கு வேண்டாம் என்று ஏதோ சொல்லவும் அவளது கையைப்பிடித்த அவள் ஹஸ்பண்டோ”தேங்க்யூ ப்ரதர் உங்க ட்ரீட்டை நாங்க அக்ஸெப்ட் பண்ணிக்கிறோம். எங்களுக்கும் நீங்களே பே பண்ணிடுங்க”என்று அவனுக்கு கைக்குலுக்கினான்.

“இட்ஸ் மை ப்ளஷர் நீங்களும் பெர்த்டே செலிப்ரேட் பண்ணத்தான் வந்தீங்களா?என்சாய்”என்றுவிட்டுப் போய்விட்டான்.

"ஆமா! நம்மளும் நிகிதா பெர்த்டேக்குத்தான் செலிப்பிரேட் பண்ண வந்தோம். இந்த தடிமாடு வந்து பிரச்சனை பண்ணினதுல மறத்துட்டோம்" என்று ஜெலீனா அப்போதான் அவள் கொண்டுவந்த கேக்கின் ஞாபகம் வந்து காருக்கு ஓடினாள்.

ஷாராதான் நிகிதாவின் கையைப்பிடித்து "உங்க பெர்த்டேக்கு மம்மியே ஸ்பெஷல் கேக் பண்ணிருந்தாங்க. அது கார்லதான் இருக்கு. ஹாப்பீ பெர்த்டே ஆன்டி" என்று வாழ்த்துகள் சொன்னாள்.

அப்போதான் நிகிதாவுக்குமே ஞாபகம் வந்தது. எதுக்கு வெளியே வந்தோம் என்பதே இந்த வெள்ளை எருமையால மறந்துட்டு என்று ஷாரா சொன்ன வாழ்த்தை ஏற்று அவளுக்கு முத்தம் வைத்தாள்.

அப்படியே ஜெலீனா கொண்டுவந்த கேக்கையும் வெட்டி பிறந்த நாளை ரொம்ப சிம்பிளாகக் கொண்டாடினாள்.

அவளுக்கு இப்போதெல்லாம் இந்த கொண்டாட்டங்களில் அவ்வளவு விருப்பம் இருப்பதில்லை என்பதால் அவங்கம்மா ஏதாவது சொன்னால்கூட வேண்டாமென்று சொல்லிவிடுவாள்.

இன்னைக்கு என்னவோ ஜெலீனா குடும்பத்தோடு கொண்டாடிவிட்டு எழுந்து அங்கிருந்து வரும்போது அவளை யாரோ துளைக்கும் பார்வையில் துண்டாடுவதுபோன்று தோன்ற திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஜேக் அவளையேதான் பார்த்திருந்தான். உடனே திரும்பி அவன் பக்கம் போனவள் "உன்னோட கேர்ள்பிரண்டுக்கு என்னோட பெர்த்டே விஷ்ஸஸ் சொல்லிடு. எனிவே தேங்க்ஸ் பார் த ட்ரீட். அப்புறம் இனிமேல் எங்கேயுமே உன்னை பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா உன்னைப் பார்த்தால் எனக்கு இரிட்டேட் ஆகுது.நான் எப்பவும் ஒன்னுபோல இருக்கமாட்டேன். உன்னை போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திடுவேன். உன் லைப்பே போயிடும். கேர் புல்”என்று எச்சரித்தாள்.

அவனோ "தேங்க்ஸ் ப்யூட்டி. நீ கோப்பட்டுப் பேசும்போதுக் கூட ரொம்ப அழகா இருக்க" என்று அப்போதும் முப்பத்திரண்டு பல்லையும் காண்பித்து ஈஈஈயென்று சிரித்தவனைப் பார்த்து வந்தக் கடுப்பில் திரும்பி வந்துவிட்டாள்.

ஆனால் அவனோ அவள் பின்னாடியே வந்தவன் நிக்கி என்று பேர் சொல்லி அழைத்தான்.

என்னது நிக்கியா?என்று நெஞ்சில் கைவைத்தவாறே அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அதற்குள் ஜெலீனா குடும்பத்தோடு காரில் ஏறிவிட்டாள்.

இந்த நிகிதா எங்கப்போனா? நம்ம பின்னாடியேதானே வந்தாள். அந்த ஜேக் வேற இன்னும் ரெஸ்ட்ராரண்ட்லதான் இருக்கான் என்று யோசனையோடு பார்த்திருந்தாள்.

ஆனால் அவள் இன்னும் வரவில்லை.

அவளுக்காக கொஞ்சநேரம் காத்திருப்போம் என்று காரில் காத்திருந்தனர்.

நிகிதா அதிர்ச்சியில் நின்றவள் திரும்பிப் பார்த்து "என்னோட பேரு எப்படி உனக்குத் தெரியும்? என்ன என்னை பாலோ பண்ணிட்டிருக்கியா? யாரு நீ?” என்று இப்போது தைரியமாகக் கேட்டாள்.

“யார் நீயா?என்ன நிக்கி நீ இப்படி கேட்டுட்ட? நீதான் என் கேர்ள்பிரண்ட் நிகிதா. உன் பெர்த்டேதானே இன்னைக்கு. அதுக்காகத்தான் ட்ரீட்டே குடுத்தேன். என் பிரண்ட்ஸுக்கும் உன் பிரண்ட்ஸுக்கும்னு சேர்த்து பே பண்ணினேன். இதுக்கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா ப்யூட்டி”

“வாட் நான் உன் கேர்ள்பிரண்டா? என்னடா உளறிட்டிருக்க. இன்னைக்குத்தான் முதன்முதலா தியேட்டர்ல வைச்சு உன்னைப் பார்த்ததே. அதுக்குள்ள கேர்ள்பிரண்டுங்குற பெர்த்டே ட்ரீட்டுங்குற. ஒழுங்கா திரும்பிப் பார்க்காமல் ஓடிடு. இல்லை இப்போவே கார்ப்ஸ்ஸ கூப்பிட்டு கம்பெயிண்ட் பண்ணிடுவேன்”

“எங்க கூப்பிடுப் பார்ப்போம் மை ப்யூட்டி”என்று அவளருகில் நெருங்கி வந்தான்.

அவளோ பயந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் இருக்கிற வளர்த்திக்கு அவள் அவ்வளவு குட்டியா தெரிந்தாள்.

"ச்சை இந்த காளமாடன் எவ்வளவு ஹைட்ல இருக்கான். இவன்கிட்ட தெரியாம வந்து பேச்சு குடுத்துட்டமோ?அப்பவே ஜெலீனாக்கூட பேசாமல் வெளியே போயிருந்திருக்கலாம்" என்று நினைத்தாலும் அவளுக்கு இன்னும் அவன் மேலுள்ள கோபமும் அதிர்ச்சியும் குறையவில்லை என்பதால் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.

க்கும் அவனுக்கு ஏதோ சின்னைப்பிள்ளை தொட்டு விளையாடுறது மாதிரியே பீலாகவும் சிரித்தான்.

“எதுக்கு இப்போ ஈஈஈயின்று சிரிக்கிற?என் பேரு உனக்கு எப்படித் தெரியும்?ஏதோ தியேட்டர்ல பார்த்ததும் பிளர்ட் பண்றன்னு நினைச்சேன். ஆனால் என்னை உன் கேர்ள்பிரண்டுன்று சொல்லுறதெல்லாம் ஓவரு பார்த்துக்க. இதுக்குமேல என் பின்னாடி வராத. நான் ஒன்னும் சிங்கிள் பொண்ணு இல்லை. எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தையும் இருக்கு. இப்படி கண்டதையும் உளறாத இடியட்”என்றவள் அப்படியே அவனிடமிருந்து நழுவி வெளியே வர நடந்தாள்.

அவனோ அவளது கையைப்பிடித்து இழுத்தவன் "உனக்கு டிவோர்ஸ் ஆனதை மட்டும் ஏன் சொல்லாம போற நிக்கி. அதையும் சேர்த்து சொல்லிட்டுப்போ. உனக்கு கல்யாணமாகிருந்தாலும் பரவாயில்லை. உனக்கு குழந்தையிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நீதான் என் கேர்ள்பிரண்ட் உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். அப்புறம் இப்படி அடிக்கடி நீ யாரு யாருன்னு கேட்டுட்டு இருக்காத புரியுதா? நான் உன் பாய்பிரண்ட் ஜேக். இப்போதைக்கு இதைமட்டும் உன் மனசுக்குள்ள வைச்சுக்கோ”என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவ்வளவுதான் இவ்வளவு நேரமும் அவன் பண்ணின டார்ச்சரையெல்லாம் தாங்கிக்கிட்டுப் பேசிட்டிருந்தவ அவன் தன்னுடைய பெர்மிஷன் இல்லாமல் முத்தமிட்டதும் பளார்னு அவன் கன்னத்தில் எவ்வி அடித்து விட்டாள்.

இந்தியா லீங்க்

https://www.amazon.in/dp/B0FY7ZCR3B

அமெரிக்கா லிங்

https://www.amazon.com/dp/B0FY7ZCR3B

இங்கிலாந்து லிங்

https://www.amazon.co.uk/dp/B0FY7ZCR3B